Angel of Light Worship
*இலுமினேட்* என்ற ஆங்கிலப் பதத்திற்கு ஒளியூட்டு, அலங்கரி, புரிந்து கொள்வதற்கு உதவி செய், விளக்கிகூறு எனப் பொருள். துலங்காத ஒரு பொருளின் மீது வெளிச்சம் வீசப்படும் பொழுது அதன் உண்மையான பிம்பம் தெளிவாக்கப்படுகின்றது. ஏதாவது ஒரு சிக்கலான காரியத்திற்கு வழி காண முற்படும்பொழுது திடீரென மூளையில் ஒரு யோசனை கிடைக்கப் பெற்றதும் மூளையில் விளக்கு ஒளிர்ந்து விட்டதாக ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறதைக் கண்டிருக்கிறோம். இத்தகைய ஞானோதய ஒளியூட்டம் பெறுவதையே *“என்லைட்டன்”* என்ற ஆங்கிலப் பதம் விளக்குகின்றது.
பரிசுத்த வேதத்தில் எசேக்கியேல் 28ம் அதிகாரத்தில் தீரு ராஜாவைக் குறித்து கூறப் பட்டுள்ள காரியங்களே உலகத்தைத் தனது ஞானத்தால் ஆட்டிப் படைக்க முயற்சி செய்யும் *ஞானஒளி தூதனை* அடையாளம் காட்டுகின்றது.
எசேக்கியேல் 28:4,12ல் இவன் *ஞானம், புத்தி மற்றும் பூரண அழகுள்ளவன்* எனக் காண்கின்றோம்.
எசேக்கியேல் 28:13ல் இவன் ஏதேன் தோட்டத்தில் இருந்தவன்; *பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திர நீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும், பொன்னும்* இவனை மூடிக்கொண்டிருக்கிறது எனக் காண்கிறோம். மேற்கூறிய அனைத்துமே விலையேறப்பெற்ற ஒளிவீசும், மின்னும் பொருள்கள் என நாம் அறிந்ததே.
இன்று நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் *எல்.சி.டி.(லிக்விட் க்றிஸ்டல் டிஸ்ப்ளே) எல்.இ.டி.( லைட் எமிட்டிங் டையோடு)* போன்ற ஒளியூட்டிகள் இத்தகைய இரத்தினங்களின் மென் துகள் படிகங்கள் உள்ளடங்கியவையே.
எசேக்கியேல் 28:14ல் இவன் காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப் எனக் காண்கிறோம். ஆதியாகமம் 3:24ல் கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிடும் பொழுது, *காவல் செய்ய அபிஷேகம் பண்ணப்பட்ட கேருபீனே இந்த ஞானஒளி தூதன்.*
எசேக்கியேல் 28:16,17ல் கர்த்தர் இவனை தம்முடைய பர்வதத்திலிருந்து, அக்கினி மயமான (ஒளி வீசும்) கற்களின் நடுவே இராதபடிக்கு ஆகாதவனென்று தள்ளுகிறதைக் காண்கிறோம். இவன் தனது மினுக்கினால் தனது ஞானத்தைக் கெடுத்து *ராஜாக்கள் முன்னிலையில் வேடிக்கைப் பொருளாக* மாறிப்போனதைக் காணமுடிகின்றது.
தனது ஞானத்தால் உலகமுழுவதையும் ஆளுகைச் செய்ய ஆசைக் கொண்ட *பண்டையக் கிரேக்க ரோமப் பேரரசின் அரண்மனையிலேயே* மேற்கூறிய விலையேறப்பெற்ற ஒளி வீசும், மின்னும் இரத்தினங்களில் பட்டை செதுக்கி செய்யப்பட்ட மிகப் பெரியதாக தொங்கும் விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மிருகத்தின் கொழுப்பு நிரப்பப்பட்ட குவளைகளில் திரியினால் ஏற்படும் சிறு ஒளியைப் பெரிய அளவில் பிரதிபலித்தன. இங்ஙனம் இந்த ஞானஒளி தூதன் உட்கார விரும்புவது இத்தகைய ஒளிவீசும், மின்னும் அழகு மிகுந்த வெளிச்சங்களையே என்பது புலனாகின்றது.
*இந்த தொங்கும் விளக்குகள் பெரும்பாலும் பாம்புப் புற்றின் வடிவிலேயே அமைக்கப் பெற்றிருக்கிறதை சற்று உற்று நோக்குங்கள்.*
2தெசலோனிக்கேயர்2:4ல் *கேட்டின் மகன் தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்* என்று வாசிக்கிறோம்.
ஆலயத்தில் பலிபீடம் கர்த்தரின் ஸ்தானம் என்று நாம் வகுத்திருக்கிறோம் ஆனால் அதன் உயரத்தைவிட உயர்ந்திருக்கும்படி தொங்கும் விளக்குகள் அமைக்கப் பெற்றிருக்கிறதைத் தேவாலயங்களில் காணமுடிகின்றது.
*அலங்காரங்கள் ஆராதனையில் மக்களின் கவனத்தை, ஆராதிப்பதிலிருந்து சிதறடிக்கின்றது, முழு இருதயத்தைப் பகுதி இருதயமாக்குகின்றது.*
லூக்கா 21:5,6ல் சிறந்த கற்களினாலும், காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்து இயேசுவிடம் சிலர் கூறியபொழுது *ஒரு கல் மற்றொரு கல்லின் மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் என்று அவர் கூறிய பதில் கி.பி.70ல் நிறைவேறியதை வரலாறு எடுத்துக்காட்டி எச்சரிக்கின்றது.*
வெளிப்படுத்தல் 21:18-22ல் புதிய எருசலேமில் மேற்கூறப்பட்ட இரத்தினங்களாலான *அலங்காரத்தைக் குறித்து கூறப்படும் பொழுது, அதிலே தேவாலயத்தைக் காணவில்லை* என்று திவ்ய வாசகனாகிய யோவான் கூறுவதைக் காண்கிறோம்.
*புளு பீம் பிராஜெக்ட்* என்ற ஒன்று நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள் இதன் நோக்கம் பரிசுத்த வேதத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கத்தரிசனங்களைத் தங்களது ராட்சத *ஒலி, ஒளி* அமைப்பின் மூலம் செயற்கையாக வானத்தில் முன்னதாகவே நிகழ்த்தி தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சித்து (மாற்கு 13:22) தங்களது கோட்பாட்டிற்குள் அனைவரையும் விழவைப்பதாகும்.
இதனைப் போன்றே புதிய எருசலேமைச் செயற்கையாக, முன்னதாகவே நிகழ்த்த முற்படுவதே நமது *ஆலய அலங்கார முயற்சிகள்.*
தங்களது ஞானத்தின் மூலம் உலகம் முழுவதையும் ஒரே கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தங்களுக்கு அத்தகைய *ஞானஒளியூட்டம்* கிடைக்கப் பெற்றிருக்கிறது என்று ஞானஒளி
தூதனை, அறிவியலை, ஞானத்தை நம்பி வழிபடும் ஒரு மார்க்கத்தார் உலகமுழுவதும் *இரகசிய சமுதாயமாக, நூதனமாக, மறை முகமாக தங்களது திட்டங்களை நயவஞ்சகமாக விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது நெற்றிக்கண்ணான சிசிடீவி கேமரா, செயற்கைக்கோள், தொலைக்காட்சி, சினிமா, பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமுதாய தகவல் தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள் வழியாக கண்கானிப்பு மற்றும் மேலாண்மை செய்கிறார்கள்.*
தூதனை, அறிவியலை, ஞானத்தை நம்பி வழிபடும் ஒரு மார்க்கத்தார் உலகமுழுவதும் *இரகசிய சமுதாயமாக, நூதனமாக, மறை முகமாக தங்களது திட்டங்களை நயவஞ்சகமாக விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது நெற்றிக்கண்ணான சிசிடீவி கேமரா, செயற்கைக்கோள், தொலைக்காட்சி, சினிமா, பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமுதாய தகவல் தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள் வழியாக கண்கானிப்பு மற்றும் மேலாண்மை செய்கிறார்கள்.*
*தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.* - 2 கொரிந்தியர் 4:4.

Comments
Post a Comment