Posts

Showing posts from December, 2019

Angel of Light Worship

Image
*இலுமினேட்* என்ற ஆங்கிலப் பதத்திற்கு ஒளியூட்டு, அலங்கரி, புரிந்து கொள்வதற்கு உதவி செய், விளக்கிகூறு எனப் பொருள். துலங்காத ஒரு பொருளின் மீது வெளிச்சம் வீசப்படும் பொழுது அதன் உண்மையான பிம்பம் தெளிவாக்கப்படுகின்றது. ஏதாவது ஒரு சிக்கலான காரியத்திற்கு வழி காண முற்படும்பொழுது திடீரென மூளையில் ஒரு யோசனை கிடைக்கப் பெற்றதும் மூளையில் விளக்கு ஒளிர்ந்து விட்டதாக ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறதைக் கண்டிருக்கிறோம். இத்தகைய ஞானோதய ஒளியூட்டம்  பெறுவதையே *“என்லைட்டன்”* என்ற ஆங்கிலப் பதம் விளக்குகின்றது.  பரிசுத்த வேதத்தில் எசேக்கியேல் 28ம் அதிகாரத்தில் தீரு ராஜாவைக் குறித்து கூறப் பட்டுள்ள காரியங்களே உலகத்தைத் தனது ஞானத்தால் ஆட்டிப் படைக்க முயற்சி செய்யும் *ஞானஒளி தூதனை* அடையாளம் காட்டுகின்றது. எசேக்கியேல் 28:4,12ல் இவன் *ஞானம், புத்தி மற்றும் பூரண அழகுள்ளவன்* எனக் காண்கின்றோம். எசேக்கியேல் 28:13ல் இவன் ஏதேன் தோட்டத்தில் இருந்தவன்; *பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திர நீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும், பொன்னும்* இவனை மூடிக...